எப்போதுமே கலைக்கான நோக்கங்கள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்கின்றன. கலை மக்களைச் சென்றடையா விட்டால் கலை சமூகத்தைப் பிரதிபலிக்கா விட்டால் என்ன பயன் என்பது ஒரு வாதம். கலை கலைக்காக, ரசனைக்காக என்பது மற்றொரு வாதம். இரண்டுமே பொருள் செறிந்த வாதங்களே எனினும், முதல் வாதமே ஜனநாயகமானது என்பது என் கருத்து. உள்மன வெளிப்பாடே கலை என்றாலும், ஒரு அழகிய எண்ணத்தின் வெளியீடாக அது இருத்தலே முக்கியம். அப்படி பொருள் செறிந்த பல பாடல்கள் தமிழ்த் திரை தோன்றிய நாள் முதலே இருந்து வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த சில பாடல்களைப் பதிவு செய்கிறேன். இது வரை ராகங்களோடு பாடல்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தேன். இப்பதிவில் ராகம் தெரியாத ஆனால் என்னைக் கவர்ந்த பாடல்களைப் பதிவு செய்கிறேன்.
இரவா இசையுடையது கவிஞரின் எழுத்து. இசை என்றால் புகழும் பண்ணும். எளிமையான சொற்களால் வாழ்வின் உண்மைகளைப் பட்டியலிடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். அப்படிப் பட்ட பல பாடல்களில் ஒன்று, "ஒரே ஒரு ஊரிலே" என்ற பாடல். படிக்காத மேதைகளான கண்ணதாசனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்த படைப்பு. திரு. பீம்சிங் அவர்களின் "ப" வரிசைப் படங்களில் இது ஒரு காவியம். எஸ்.வி.ரங்காராவ் என்ற மாபெரும் கலைஞன் நடித்த திரைப்படம். அவருடைய இணையாக பசுப்புலேட்டி கண்ணாம்பா. இசை மறைந்த திரு.கே.வி. மகாதேவன். பாடலைப் பாடியோர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன். மணியோசை போன்ற குரல் வளம். இவர் குரல் வளத்தால் செழுமை பெற்ற தமிழ்ப் பாடல்கள் ஏராளம். கூடவே திருமதி. ராஜலக்ஷ்மி.
இந்தப் பாடலைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பங்குச் சந்தை வியாபாரத்தில் தேர்ந்த ஒருவர். அதன் மூலமே ஒரு தலைமுறையின் வாழ்வுக்கான வருவாயை ஈட்டியவர். வாழ்வின் மாலைப் பொழுதில் நிற்பவர். மணி விழா கண்டவர். மூன்று மகன்கள். ஒரு மகள். மூன்று மகன்களும் மணமானவர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்த தருணத்தில் பங்குச் சந்தை, நட்டத்திலும் பங்கு கொள்ள வைக்கிறது. சேமிக்காததாலும் ஆடம்பர வாழ்வினாலும் விரைவில் ஏழ்மையை அடையும் நிலை வருகிறது. மகன்கள் தங்கள் வாழ்வை மட்டும் பார்த்தால் போதும் என எண்ணுகிறார்கள். அந்த வயதான தம்பதிகள் மகளின் திருமணத்தை நடத்த முடியாமலும், வாழ்வின் நிலை மாறியதை தாங்க மாட்டாமலும் தவிக்கிறார்கள். அவர்கள் உறவில் ஒரு தாய் தந்தையற்ற பிள்ளை. அவனையும் இவர்களே வளர்த்து வருகிறார்கள். பெற்ற பிள்ளைகள் கை விட்ட போதும் பெறாத அந்தப் பிள்ளை, இந்தப் பெரியவர்களுக்கு உதவுகிறான் என்று வரும் அந்தக் கதை. அந்தக் கதையில் ஒரு கட்டம். இந்தப் பெரியவரின் பெயரக் குழந்தைகளை மகிழ்விக்க அந்தப் பெறாத பிள்ளையும் அவன் மனைவியும் பாடும் கதைப் பாடல் தான் இது. திரையில் வெகுளித் தனமாகத் தோன்றும் கெட்டிக்கார நடிப்புக்குச் சொந்தக்காரர் நடிகர் திலகம். அவரோடு திருமதி. சௌகார் ஜானகியும்.
இந்தப் பாடல் ஒரு கதை சொல்கிறது. அந்தக் கதையும் ஒரு musical தான். "ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" என்று பிள்ளைக் கதை போலத் தொடங்கி பல பிள்ளைகளுக்கு பாடம் சொல்கிறார் கவிஞர்.
"ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை,
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை"'
என்று அந்தப் பிள்ளைகளின் தன்மையையும் தரத்தையும் பட்டியலிட்டு விட்டு, கவிஞர் சொல்கிறார்,
" பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் - அதைப்
பிள்ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார் - அதன்
உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்"
பின்னர் மக்களைப் பார்த்து சொல்கிறார்பிள்ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார் - அதன்
உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்"
"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு
துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா - நன்றி
கேட்ட மகனை விட நாய்கள் மேலடா"
துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா - நன்றி
கேட்ட மகனை விட நாய்கள் மேலடா"
எளிமையான கதைப் பாடல் முடியும் போது எத்தனை அழுத்தமான உணர்வு மனதில் பதிகிறது. படத்துக்காக எழுதப் பட்ட பாடலா இது. சமூகத் தரத்துக்காக சொல்லப் பட்ட பாடல் அல்லவா. ராகம் தெரியாவிட்டாலும் மனதைச் சுண்டும் பாடல். பாடலை "https://www.youtube.com/watch?v=Uh3980VY49Y" என்ற பதிவில் காணலாம்.
9. மேற்சொன்ன பாடல் பெற்றோர்க்கும் பிள்ளைக்குமான உறவென்றால், இந்தப் பாடல் ஊடல் கொண்ட கணவன் மனைவிக்கு நடுவே நடக்கும் நாடகப் பாடல். இந்த ஊடலுக்கு அவனது கையாலாகாத் தனமும் தாழ்வு மனப்பான்மையுமே காரணம். ஆண்களின் நிலவுடைமைச் சமுதாயமாகவே பல நூற்றாண்டுகளாக பாரதம் இருந்து வந்திருக்கிறது. பெண்கள் விவசாயக் கூலிகளாகவும் குடும்பத் தொழிலில் உதவியாளர்களாகவும் இருந்திருக்கிறார்களே ஒழிய பொதுவிடங்களில் அதிகாரம் செலுத்தும் நிலைகளில் இந்தியச் சமூகத்தில் அவர்கள் இருந்ததில்லை. சில பத்தாண்டுகளாகத் தான் இது மாறத் தொடங்கி, சம நிலையில் ஆண்களோடு போட்டியிட்டு, பணிகளில் பெண்கள் இடம் பெறுகிறார்கள். ஆனால் பரம்பரை என்றும் பாரம்பரியம் என்றும் அடக்கி ஆள்வதே இயல்பு என்றும் எண்ணங்கள் ஊறிப் போயிருக்கும் ஆண் மனம், வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி குடும்பத்தை வழி நடத்தும் தலைவியாக பெண்ணை ஏற்பதில் தடங்கல் கொள்கிறது. சுயம் பாதிக்கப் பட்டதாகவும் அவள் தன்னை மதியாததாகவும் கருதுகிறது. முன்னேற்றம் பெற்று விட்டதாகச் சொல்லப் படும் இந்தக் காலத்திலேயே கூட இது ஏற்படும் போது, சுமார் நாற்பதாண்டுகள் முன்பு நிலை என்னவாக இருந்திருக்குமென்று ஊகிக்க முடிகிறதல்லவா.
சூர்யகாந்தி என்ற திரைப்படத்தில் செல்வி. ஜெயலலிதாவும் மறைந்த திரு.முத்துராமனும் நடித்த திரைப்படம். இந்தப் படத்தில் மேற்சொன்ன ஒரு அம்சம் தான் கதையின் மையக் கரு. காதலித்துக் கடிமணம் புரிந்த அந்தத் தம்பதிக்குள் இந்த சுயம் சார்ந்த பிரச்னைகள் ஊடலைத் தோற்றுவிக்கிறது. அவனது அஹங்காரத்தை அவள் எப்படியோ தணிவிக்க முயல்கிறாள். ஆனால் அது நீடித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு தருணமாக அவன் அவளை விட மேல் எனச் சுட்ட முயல்கிறான். தற்செயலாகவோ அவளது மேலான எண்ணங்களாலோ அவளே மேம்பட்டவள் ஆகிறாள். அப்படி அவனது சுயம் காயப் பட்ட வேளையில், ஒரு பொது நிகழ்வில் ஒருவர் வருவது தெரியாமல் மற்றவர் வர, அங்கே பாடலும் அவர்கள் கதையைப் பேசுகிறது. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இந்தக் காட்சியில் யார் பாடுவது போல் இருந்தால் சிறப்பு என்று விவாதம் நடந்த போது செல்வி. ஜெயலலிதா கவிஞரையே பாடுவது போல காட்சி அமைக்க யோசனை சொன்னாராம். அந்தக் கவிஞன், காலத்துக்கும் பேசப் படும் பாடலில் தோன்றினான். அவனுக்கு குரல் தந்தது டி.எம்.எஸ்.
சுயம் காயப் பட்ட மனிதனின் பாடல் என்றாலும் கூட, கவிஞர் பொதுவில் இல்லாதவன் நிலையை எண்ணிப் பாட்டை அமைத்துள்ளார். அந்தக் கதைக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் பொருந்தும் அழகிய பாடல். பாடல் முழுவதுமே தர வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அளவு கருதி இந்தச் சில வரிகளைச் சுட்டுகிறேன்.
"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது...
கருடா சௌக்யமா? - யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே.. - கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..." இப்படி ஆரம்பமே அமர்களப் படுகிறது.
வரிவரியாகத் தமிழ்ப் பெரியவர்களை எல்லாம் துணைக்கு அழைத்து தன் வாதத்துக்கு வலிமை தேடும் அந்த மனம் பின்னர் கேட்கிறதுகருடா சௌக்யமா? - யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே.. - கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..." இப்படி ஆரம்பமே அமர்களப் படுகிறது.
"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் - அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?"
இப்படித் தத்துவமும் தமிழுமாக மனதின் ரணத்தைச் சொன்ன பின், நேரடியாக அவளைக் குற்றஞ்சாட்டி, இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?"
"நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே...
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே"
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே"
என்னும் போது அந்த மனதின் வலியை அப்படியே அவளுக்குத் தந்து விடுகிறான் அவன். காட்சியில் கவிஞர் ஞானி போலத் தோன்ற, காயம்பட்ட உள்ளத்தோடு குற்றம்சாட்டும் பாவனையில் முத்துராமனும், புரியவைக்க முடியாத வேதனை, கணவன் மனம் புண்படுகிறானே என்ற யோசனை இப்படிப் பரிதவிக்கும் பாவத்தில் செல்வி.ஜெயலலிதா என அற்புதமான காட்சியை, "http://www.youtube.com/watch?v=r39pR0j144g" என்ற பதிவில் காணலாம்.
10. இந்தப் பதிவில் மூன்றாவது வகையாக நான் கொள்ளும் பாடல், ஒரு தாலாட்டு. வறுமையே வாழ்வாகிப் போன பெற்றோர் இருவர் தன் மகவுக்குப் பாடும் தாலாட்டு. அவள் எப்படியேனும் தன் மகனுக்கு ஒரு பொன்னுலகு காத்திருக்கிறது என நம்பிக்கை தெரிவிக்க, உள்ள நிலை உண்ணவும் வழியில்லை எனத் தெரிவிக்கிறான். துலாபாரம் என்ற திரைப்படம். மலையாளத்திலிருந்து தமிழ்ப் படுத்தப் பட்ட படம். திரு. ஏ.வின்சென்ட் அவர்கள் இயக்கிய திரைக் காவியம். திரு.ஜி.தேவராஜன் இசையமைப்பில் டி.எம்.எஸ். அவர்களும் திருமதி.பி.சுசீலா அவர்களும் பாடிய அற்புதப் பாடல்.
முதல் நான்கு வரிகள் சொல்லும் பாடலின் தரத்தை. அவள் பாடுகிறாள்..
"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே ".
அவளது கற்பனையை எண்ணி நகைத்தவாரே அவன் பாடுகிறான்
"பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே"
நெஞ்சில் ஈரம் உள்ளோரை எல்லாம் நெகிழ வைக்கும் இந்தப் பாடல்,
"கண்ணுறங்கு கண்ணுறங்குபொன்னுலகம் கண்ணில் காணும் வரை"
என்று முடியும் பொது உங்கள் இமையோரம் நீர் கசிந்திருக்கும். காட்சியை "http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw" என்ற பதிவில் காணுங்கள்
காட்சியில் தோன்றும் ஏ.வி.எம்.ராஜனையும் சாரதாவையும் இயல்பான நடிப்புக்குப் பாராட்டிக்கொண்டே..
காட்சியில் தோன்றும் ஏ.வி.எம்.ராஜனையும் சாரதாவையும் இயல்பான நடிப்புக்குப் பாராட்டிக்கொண்டே..





No comments:
Post a Comment