இதனை சென்ற பதிவின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன். இதுவும் சமீபத்திய
நிகழ்வின் அடிப்படையில் எனக்குத் தோன்றியவற்றை இங்கே சொல்கிறேன்.
உத்தரப்ப்ரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் சிலைகள்
உடைக்கப்படுகின்றன. அங்கே சில நாட்களுக்குப் பின் பாபா சாஹேப் அம்பேத்கரின்
சிலைகள் உடைக்கப்படுகின்றன. இதில் இரு வேறு கூறுகளைக் காண்கிறேன் நான்.
அடையாள அரசியல்
இந்து மதத்தில் உருவங்கள் தான் வழிபாட்டின் ஆரம்பத் தொடக்கம். ஆனால் உருவ
வழிபாடுகள் புறக்கணிக்கப் படுவதாக நம்பும் சமயங்கள் தான் அதிகம் உலகில்.
ஆனால் அவர்களுக்கும் ஏதாவது ஒரு உருவம் தங்கள் மரியாதையின் இருப்பாக அல்லது
தங்கள் வெறுப்பின் சித்தரிப்பாக இருப்பதையே காண்கிறோம். இஸ்லாத்தில் ஹஜ்
பயணத்தில் ஜமாரத்தில் கல் எறிவது ஒரு முக்கியமான சடங்கு. அதே போல்
யூதர்களுக்கு கொஷேல் என்ற சுவர் ஒரு வழிபடு அடையாளம். சடங்குகளை வெறுத்த
புத்தனுக்கு விகாரைகளும் பகோடாக்களும் தாபகாக்களும் எழுப்பி அவனையே
துதிப்பவர்கள் பௌத்தர்கள். இவை எல்லாமே உருவங்களை புறக்கணித்த சமயங்களில்
சில அடையாள உருவங்கள் இருப்பதன் அடையாளம்.
ஆனால் இவை எல்லாவற்றையுமே எதிர்த்த பகுத்தறிவுவாதிகளுக்கும் சில சிலைகள் தான் முக்கியம். அவற்றின் பராமரிப்பு தான் முக்கியம். சிலைகளை வெறுத்த பெரியாருக்கே சிலைகள். அவர் எள்ளி நகையாடிய கண்ணகிக்கு சிலை. இதிலே வேடிக்கை என்னவென்றால் கண்ணகி பத்தினித் தெய்வமாகவே - பகவதியாகவே வழி படப்படும் ஒரு பாத்திரம். திருவள்ளுவரின் ஒரு குறளுக்கும் இலக்கணமாகத் தகுதி இல்லாவிட்டாலும் அவருக்கு விண்ணை முட்டும் சிலை எடுத்து களிப்படைபவர்கள். இதெல்லாம் தமிழகத்தில் பலமுறை பேசிப்பேசி அலுத்தாயிற்று தான். அதனை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வைப்பதில் தமிழக முதல்வரின் அரசியல் அமைகிறது. உதாரணமாக அதிலே என்ன புனிதம் என்று கோவில்களைக் கேலி செய்தவர்களை கண்ணகி சிலையின் புனிதத்தை போதிக்க வைத்தார்.
பிறகு இந்த ஆட்சியில் தலைமைச் செயலகம். அண்ணா நூலகம். முதல் கட்டிடமாவது கேலிக்கூத்தாக திறக்கப்பட்டது. ஊழலால் கட்டப்பட்டது. ஆனால் இரண்டாவது கட்டிடம் நிச்சயம் புறக்கணிக்கத் தக்கதல்ல. அந்த நூலகத்துக்கு இன்னும் சில சிறப்புக்களைச் செய்து பெயர் எடுத்திருக்க வேண்டிய முதல்வர் அதனை மருத்தவமனையாக மாற்றுவேன் என்று விதண்டாவாதத்தில் இறங்கியிருப்பது தன்னைத் தானே நகைப்புக்கு உள்ளாக்கியிருக்கும் செயல். இப்போது இரு முடிவுகளும் நீதிமன்றத்தில் வழக்குகளாக மாறியிருக்கின்றன.
இது நிற்க. சிலைகள் எப்படிப்பட்ட அடையாளமாக மாற்ற முடியும் என்பதற்கு உத்தரப்ப்ரதேசம் ஒரு நல்ல உதாரணம். மாயாவதி முதல்வராக இருந்த பொழுது அவர் சமாஜ்வாதிக் கட்சியின் கொள்கை வழிகாட்டி ராம் மனோகர் லோகியாவுக்கு எழுப்பப் பட்ட சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ அவர் பராமரித்து அதுவே நல்ல நாகரிகம் எனக் காட்டினார். அதே போல எந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டதோ, எந்த தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பொதுவிடங்களில் சம உரிமை புறக்கணிக்கப் பட்டதோ, அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களின் பெயர்களில் பல பூங்காக்களையும் நினைவுச் சின்னங்களையும் நிறுவினார். அவர்களது பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் அவற்றை அடையாளங்கள் ஆக்கினார். தனக்கும் தனது கட்சி சின்னத்துக்கும் சிலைகள் எடுத்துக் கொண்டது ஒரு அதீதமான முடிவு. (தவிர்த்திருக்க வேண்டிய முடிவு என்பது என் அபிப்ராயாயம்)
இதனை அவர் செய்த போது இரு விதமான விமர்சனங்கள் எழுந்தன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக செலவழிக்கப்பட வேண்டிய பணத்தை வீணாக்குவதாக பலர் கூறினார்கள். அதிலே என்ன தவறு என்று சிலர் வாதாடினார்கள். ஆனால் இப்போதைய நிகழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. அந்த சிலைகளை உடைத்தவர்கள் ஒரு சமூக இழிவைக் காட்டினார்கள். அந்தச் சிலைகளைக் கூட பொறுக்க முடியாத சமூகம் தான் நம்முடையது. அவர்களது வளர்ச்சியை எப்படி இவர்கள் பார்க்கக் கூடும்?
சாதிகள் இல்லையடி பாப்பா என்றானே பாரதி. அவன் சொன்ன அந்தக் கருத்தை மெய்ப்பிக்க முடியாத அவலம் ஒரு புறமென்றால். அதனையே சொல்லி சாதிகளை வளர்க்கும் அரசியல் கட்சிகளையும், அரசுகளையும் என்னவென்று சொல்வது. கல்வியை வழங்குவதில் சாதியா எனச் சாடிக்கொண்டே அதன் அடிப்படியில் சாதியைப் புகுத்திய கனவான்கள் அல்லவா நமது அரசியலாளர்கள். அது தான் அந்த மக்களின் முன்னேற்றத்துக்கு வழி என்று வாதிடுபவர்கள், அவர்கள் கட்சியின் வேட்பாளர்களை எல்லாம் அந்தந்தத் தொகுதியின் பெரும்பான்மைச் சாதியிலிருந்தே தேர்வு செய்வதிலிருந்தே இவர்கள் நேர்மை புரியாதா? தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர்த்து வேறு தொகுதிகளில் அச்சமூகத்தைச் சார்ந்தவர்களை நிறுத்த முயன்றிருக்கிறார்களா? அப்படியே தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகளிலுமே அந்தத் தொகுதியில் பெரும்பான்மை இனம் எதுவோ அதனைச் சார்ந்த வேட்பாளரே நிற்பார். இப்படி எந்தவித நேர்மையும் இல்லாமல் நமது அரசியல் கட்சிகள் நடக்கின்றன.
ஆனால் மாயாவதி இதில் கொஞ்சம் பாராட்டத்தக்கவர் என்றே சொல்வேன் நான். அவரது ஊழல் வழக்குகளுக்காக அல்ல. அவரது சில நல்ல நடவடிக்கைகளுக்காக. உதாரணமாக பொருளாதார ரீதியில் பின்னணியில் இருக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள நியாயத்தை பேசும் துணிவு இருந்தது. இதனை மற்ற தலைவர்கள் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. உதாரணமாக ஜெயலலிதா இதனைச் செய்திருந்தால் நிச்சயம் பார்பனத்தி என்று அடையாளம் காணப்பட்டிருப்பார். ஆனால் எந்த சமூகம் ஒதுக்கீட்டால் பயன் அடையுமோ, எந்தச் சமூகம் பாதிக்கப்பட்டதால் ஒதுக்கீடு கொண்டு வரப் பட்டதோ அந்தச் சமூகத்திலிருந்து வரும் ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர், பொருளாதார அடிப்படையை(அரசியல் காரங்களுக்காகக் கூட இருக்கட்டுமே) நியாயம் எனப் பேசியது நிச்சயம் பாரட்டத்தக்க ஒரு விஷயமே. என்ன சொல்கிறீர்கள்?

Please change the Back-Ground or Text Color it is difficult to read
ReplyDelete