சில சம்பவங்கள் என் கண் முன் நடந்து என்னை சிந்திக்க வைத்தவை. சில நான்
படித்து, பகிர்ந்து கொள்ள நினைத்தவை. சில சமூகத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான
விஷயங்கள். அப்படி என் எண்ணத்தை ஈர்த்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம் எனக்
கருதுகிறேன். இதனை ஒரு தொடர் போல எழுத ஆசைப்படுகிறேன்.
ராமானுஜம்
நான் பணியளவில் ஒரு கணிப்பொறியாளன். ஆனால் கணிதத்துக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம் தான். கணிதம் என்னை ஈர்க்காத பொழுதும் கூட கணிதவியலாளர்களின் வாழ்வு - அவர்கள் வரலாறு என்னை ஈர்த்தே வந்திருக்கிறது.
பொறியியல் இளநிலைக்கல்விக்கான நேர்முகத்(Engineering entrance) தேர்வின் பயிற்சி புத்தகத்தில் ஒவ்வொரு தலைப்புக்கு கீழும் அதன் சிறிய வரலாறு அல்லது அந்த துறையில் சிறந்த கணித வல்லுனரைப் பற்றிய குறிப்பு கொடுக்கப் பட்டிருக்கும். நான் கணக்குப் புத்தகத்தின் பயிற்சிக் கணக்குகளைப் படித்ததைக் காட்டிலும் இந்த குறிப்புகளை விரும்பி படித்திருக்கிறேன். அதில் நிகழ்-தகவு(Probability) பற்றிய பாடத்தில் ஒரு குறிப்பு. கர்டனோ கிரோலமோ(Cardano Girolamo) என்ற 15 ம் நூற்றாண்டு கணித வல்லுநர், தனது இறப்பை கணித்தார் . அந்த நாளில் தான் இறக்காத பொழுதும் தனது கணிப்பை உண்மையாக்குவதற்காக தற்கொலை செய்து கொண்டாராம். அதிலிருந்து இந்த கொலை-வெறி பிடித்த கணிதத்தின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பையும் விட்டு விட்டேன்.
ஆனால் சமீபத்தில் ராபர்ட் கநிகேல்(Robert Kanigel) என்ற அமெரிக்க எழுத்தாளர் ராமானுஜம் அவர்களின் வாழ்வைப் பற்றி "The man who knew infinity" நூல் ஒன்று எழுதி இருப்பதாக அறிந்தேன். அந்த புத்தகத்தில் நான் ரசித்த சிலவற்றை என் பார்வையில் பகிர்ந்து கொள்கிறேன்.
ராமானுஜம் தமிழகத்தில் இருந்து பிரிட்டன் சென்ற பொழுது அவரைப் பேணியவர் ஜி.எச்.ஹார்டி . அவரும் ஒரு மிக சிறந்த கணித மேதை. அவரைப் பொறுத்த மட்டில் பயனுறு கணிதம்(Applied Mathematics) கொஞ்சம் மட்டமானதே. கணிதமும் ஒரு கலை போல. அதற்கு பயன் ஆன்ம அனுபவமே என்பது அவரது முடிவு. (ஹார்டி ஒரு நாத்திகர்)
தீவிர வைணவரான ராமானுஜமும் அப்படி எண்ணுபவரே. ஒரு கணித
சமன்பாடு(Equation) கடவுளின் குறிப்பு எனக் கருதியவர் அவர். அவருக்கு எண்-கணிதத்தில்
குறிப்பாக முடிவிலித் தொடர்களில்(Infinite series) ஆர்வம் அதிகம்.
1+ 1/2 + 1/4 + 1/8 + 1/16 +....
இந்தத் தொடரில் எண்கள் இரண்டை நோக்கி சென்று கொண்டே இருக்கும். ஆனால் அதனை
அடையாது. ஏதோ ஒரு சிறிய அளவு மிச்சம் இருந்து கொண்டே இருக்கும். இதில்
என்ன கடவுள் தத்துவம் இருக்கிறது என்கிறீர்களா?
ஆன்ம அனுபவத்தில் உயர்நிலை என்பதோ உச்சம் என்பதோ விவரிக்க முடியாதது. அதைத் தான் மாணிக்கவாசகர் "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்கிறார். அந்த உச்சத்தை நோக்கிய பயணம் எல்லை இல்லாதது. அதனை நோக்கிய பயணத்தில் முன்னேற்றம் இருக்கும் ஆனால் முழுமை இருக்காது. இந்த எண்களும் அதைத் தானே செய்கின்றன. இரண்டை நோக்கிய பயணம். ஆனால் முடிவில்லாத பயணம்.
இந்தப் பார்வை ராமானுஜத்துக்கு இருந்திருக்கிறது. நாமக்கல்லில் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி நாமகிரி தாயாரே தனது கணித ஆற்றலுக்கு ஊற்று என எண்ணியவர் ராமானுஜம். பிரிட்டன் செல்ல அந்த நாமகிரித் தாயாரே உத்தரவு கொடுத்ததாக நம்பியவர்.

பலரும் விஞ்ஞானிகள்
கடவுளை நம்புவது முரண் என்கிறார்கள். ஆனால் இப்படி கணிதத்தையே ஆன்ம வழியாக
எடுத்துச் சென்ற இந்தியர்கள் பலர். இன்றைய காலகட்டத்தில் நமது முன்னாள்
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் கூட ஒரு சிறந்த உதாரணம்.
என்ன சொல்கிறீர்கள்?
No comments:
Post a Comment