ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்கிறது தமிழ்.
மன்மோகன்சிங்குக்கு இது தெரிய நியாயமில்லை! ஆனால் அப்படிப் பட்டவர் தான்
அவர். இந்தியாவின் மானம் அலைக்கற்றை ஊழலில் கப்பலேறிய போது சிங்கம்
சீறவில்லை. நிலக்கரி ஊழலால் இந்தியாவின் மின் உற்பத்தி சீரழிந்த போது
சிங்கம் கிளம்பவில்லை. உச்ச நீதிமன்றம் பல முறை அரசைக் குட்டிய போதும்
தலைப்பாகை கூட அசையவில்லை. மாநில அரசுகள் மத்திய அரசைத் துச்சமென மதிக்கும்
போதும் அவரது வெண்தாடிக்குள் இருந்த சிரிப்பு மறையவில்லை. சீனா எல்லைகளை
விழுங்க முயன்ற போதும் சொரணை தோன்றவில்லை. பாகிஸ்தான் பல முறை தன்
கூலிப்படையை ஏவிய போதும் சீற்றம் எழவில்லை. இலங்கை விலாங்கு மீன் போல்
துள்ளிய போதும் அவருக்கு தமிழன் எள்ளலாகவே பட்டான். அவரது அமைச்சரவை,
கூட்டணித் தலைமைகளின் மைதானம் ஆன போதும் அவருக்கு உரைக்கவில்லை. ஆனால்
அவரது பொறுமைக்கும் எல்லை வந்தது.
அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க முடியாத போதெல்லாம் அவருக்கு மீசை துடிக்கும். புருவம் நெரிக்கும். ரோஷம் பொங்கும். சிங்கம் கிளம்பிவிடும். அணுமின் ஒப்பந்தம் தான் இந்தியாவின் மின்-தேவைகளைத் தீர்க்கும் அரு மருந்து என்றார் 2008 -இல். ஆண்டுகள் நான்காகின்றன. ஒரு மாநிலமாவது மின் தடையைத் தீர்திருக்கிறதா. "அதெல்லாம் என் கேக்கற நீ" - என்பார் 'அன்னை' சோனியாவின் ஆசி பெற்ற இந்த அற்புதப் பிரதமர். அவருக்கு "செல்லம்" அமெரிக்கா தான்.
பழைய கதையில் ஒரு வங்காள ஏமாளி வில்லன்(கம்யூனிஸ்ட்) என்றால் இப்போது ஒரு வங்காள ஏமாளி வில்லி(மமதா தாங்க!). போன ஆட்சி அமெரிக்காவின் அணு வியாபாரிகளின் குறைகளைக் களைந்தது. இம்முறை அன்னையின் அருளாசி அமெரிக்காவின் பெரு வணிகத் தொடர்களுக்கு கிடைத்திருக்கிறது. "ஆஹா-வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று ஆனந்த் ஷர்மாக்கள் லாலி பாட, "மாற்றமில்லை" என்று உடைவாளை வீசி அண்ணாச்சி சிதம்பரம் ஆட, வந்துவிட்டது அந்நிய நேரடி முதலீடு.
முலாயம் இருக்கிறார் காவல் காக்க, பாலுக்கு பூனை போல. மாயாவதி இருக்கிறார் கரும்புக்கு யானை போல. காணாவிட்டால் நமது கழகக் கண்மணிகளோடு தமிழினத் தலைவர் இருக்கிறார். விதர்பா விவசாயிகளின் பாதுகாவலர், மட்டைபந்து சம்மேளனத் தலைவர் சரத் பவார் இருக்கிறார். நகைச்சுவை நவரசத்துக்கு லாலுவும் பாஸ்வானும். கேட்பானேன், அன்னையின் ஆட்சியில் ஒரே கொண்டாட்டம் தான். அம்மணிக்கு இப்போது வீரம் வேறு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் படை திரட்டுகிறார். ஊடகங்களில் கருத்து விதைக்கிறார். ஆனால் அறுவடை எல்லா ஏழை இந்தியன் தலையில் தான்.
பாரதி பாடல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது, "பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்!"

No comments:
Post a Comment