விடுதலை - பெரியார் தன் இதழுக்குச் சூட்டிய பெயர். ஜெயபேரிகை கொட்டி
வரவேற்றானே பாரதி அந்தப் பெயர் இது. நாம் பிரிட்டிஷ் அரசிலிரிந்து பெற்ற
விடுதலைக்கு 66 வயது. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று தான் காணாத அந்த
ஆனந்த சுதந்திரத்தை முண்டாசுக் கவி நல்ல வேளை பார்க்கவில்லை. இல்லையெனில்
நடப்பதைப் பார்த்து மனம் வெதும்பியிருப்பான் அந்த அக்கினிக் குஞ்சு...
கேள்வி கேட்ட விவசாயி, மாவோயிஸ்ட் என அடையாளம் காட்டப் பட்டு கைது செய்யப்
படுகிறான், வந்தே மாதரம் என்று முழங்கிய வங்க பூமியிலே.
திருநீறு அணிந்தவன் எல்லாம் கயிலை ஏக முடியுமெனின் சாம்பலில் புரண்ட கழுதை கூட புகுமோ என்றான் கன்னடக் கவி சர்வக்ஞன். அவனுக்கு சிலை அமைப்பதில் ஆர்வம் காட்டும் கன்னட அரசு இன்று வடகிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பல இந்தியர்கள் அச்சம் காரணமாக தன் மாநிலத்தை விட்டு அஞ்சி வெளியேறுவதைக் கண்டு மௌனமாயிருக்கிறது.
அசோம் மாநிலத்தில் நிகழும் அசாதாரணமான கலவரத்துக்கு மராட்டியத்தில் பழி வாங்கப் படுகிறது, கர்நாடகத்தில் கருவருக்கப்படுகிறது. ஒற்றை தேசமென்று இதனை எப்படிச் சொல்வது. இத்தனைக்கும் நடுவே ஒரு கேலிக் கூத்து. பாகிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கில் இந்துக் குடும்பங்கள் இந்தியாவில் தஞ்சம் புக வந்ததை வைத்து அரசியல் நடக்கிறது. இதே நாட்டில் ஒரு புறத்துக் குடிமக்கள் மறுபுறத்திலிருந்து விரட்டப் படுகின்றனர். அதனைத் தடுக்க முடியவில்லை. சொந்த மாநிலத்தில் அகதிகளைப் போல லட்சக் கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். அதற்கு பரிகாரம் தேட ஒருவருக்கும் துணிவுமில்லை. தெளிவுமில்லை. இருபதாண்டுகளாக காஷ்மீரத்து பண்டிதர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அடையாளம் இழந்துள்ளனர். அதற்குத் தீர்வு எங்கே?
நல்ல சுதந்திரம் கிடைத்தது நமக்கு. நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிந்து விட்டோம்...
சமூக விடுதலை கிடைக்காமல் விடுதலை என்பது ஏமாற்றமே என்றாரே பெரியார். அவர் சொல்வது போல இது துக்க தினமே. விடுதலைக்கு தகுதியற்ற நாடு என்று ஏகடியம் செய்த சர்சில்லின் வார்த்தையை மெய்ப்பித்திருக்கிறோம் போலும்.
மக்களை மதிக்காத தலைமைகள். மனிதர்களை இனம் பிரித்து பார்த்தே அழியும் பொது மக்கள்.
குடிபுறம் காத்தோம்பி குற்றம் களைய வேண்டிய அரசு கையாலாகாமல் வேடிக்கை பார்க்கிறது. வேதனைப் படுவதாகப் புலம்புகிறது. வெளிநாட்டு முதலீட்டிலே தான் வெளிச்சம் இருக்கிறதென்று பசப்புகிறது. அந்நியன் வந்து ஆட்சியைக் கைப்பற்றிய வழி கூட மறந்தது போலும் நமக்கு. வியாபாரத்துக்கு இடம் குடுத்து நம் நாட்டை சந்தைப்படுத்திய நமது மதியீனம் இன்னமும் மாறவில்லை என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்...
சகோதரச் சண்டையிட்டு சளைக்காமல் அந்நியனுக்கு அடிவருடி நாட்டை இழந்த நமக்கு இன்னும் புத்தி வரவில்லையே... வேற்றுமையில் ஒற்றுமையா? வெங்காயம்....

It is Reality. It is to be considered by our Government as well as our Citizens.
ReplyDelete